ஓமான்: பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த திவால் சட்டத்தை செயல்படுத்த உள்ளது
ஓமான் அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகச் சூழலை உயர்த்துவதற்காக ஜூலை 7 செவ்வாய்க்கிழமை முதல் ஓமானில் திவால் சட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
ஓமான் செய்தி நிறுவனம் (ஓ.என்.ஏ) ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராயல் டிக்ரி எண் 53/2019 திவால் சட்டம் 2020 வரும் ஜூலை 7 செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் ஓமானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MoCI) திவால்நிலை சட்டம் 2020 சட்டத்தை அறிவித்தது.
இந்த சட்டமானது ஜூலை 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இது நிறுவனங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் படி கடன்களை செலுத்திய பின்னர் கடன் வழங்குநர்களுடன் சமரசம் செய்து நிதி கொந்தளிப்பிலிருந்து வெளியேற உதவும் என்றும் கூறியிருந்தது.
வர்த்தக அமைச்சகத்தின் சட்டத் துறையின் செயல் இயக்குநர் மொஹமத் பின் ரஷீத் அல் பாடி கூறுகையில், கடன்களை செலுத்துவதை நிறுத்திய கடனாளர்கள் வணிக நிறுவனங்களின் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டுத் துறைக்கு விண்ணப்பிக்கலாம்.
மறுசீரமைப்பு கோருமாறு கடனாளர் தனது விண்ணப்பத்தை தாக்கல் செய்தால் திவால்நிலை அறிவித்த அவருக்கு எதிராக இறுதி தீர்ப்பு எதுவும் வெளியிடப்படாது என்றார்.