ஓமானில் விசிட் விசாவில் வந்தவர்கள் தங்களது விசாவை குடும்ப விசாவாக மாற்ற முடியும்

தற்போது ஓமானில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விசிட் விசாவில் இருந்தால் அவர்களை குடும்ப விசாவிற்கு மாற்ற ஓமான் அரசு அனுமதிக்கிறது.

ஓமானில் வசிக்கும் வெளிநாட்டவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் குடும்ப விசா தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விசா வெளிநாட்டவர்களின் உறுதிசெய்யப்பட்ட திருமண சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் 21 வயதிற்கு உட்பட்ட அவர்களது குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

இதற்கு தேவையான ஆவனங்கள்:

பாஸ்போர்ட்டின் நகல், ஆறு மாதங்களுக்கு குறையாத செல்லுபடியாக இருக்க வேண்டும்

ஓமானில் வசிக்கும் வெளிநாட்டவரின் பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் அவரது குடியிருப்பு அட்டையின் நகல்

உறுதிமொழி படிவத்தை பூத்தி செய்யவேண்டும். அதில் ஸ்பான்சர் மற்றும் அவரது வெளிநாட்டு ஊழியர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது (15) பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு தேவையில்லை.

பாஸ்போர்டில் உறவு முறை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உறவு முறைவை உறுதிபடுத்தும் சான்றை இணைக்க வேண்டும்

திருமணச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணத்தை அவரது நாட்டின் தூதரகம் மற்றும் ஓமனி வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கையொப்ப சரிபார்ப்புக்காக தனிப்பட்ட அடையாள அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரைத் தவிர வேறு ஒருவரால் விண்ணப்பம் வழங்கப்பட்டால், பிரதிநிதி ஓமானியாக இருக்க வேண்டும் மற்றும் ஸ்பான்சரின் வேண்டுகோளின்படி பாஸ்போர்ட் மற்றும் இயக்குநரகம் ஜெனரலில் இருந்து எழுதப்பட்ட அங்கீகாரத்தை வைத்திருக்க வேண்டும்.

சுகாதார அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் இணைக்க வேண்டும்.