அமீரகம்: ஜூன் இறுதிக்குள் 90,000 இந்தியர்களை இந்தியா அனுப்ப திட்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் சுமார் 90,000 இந்தியர்களை ஜூன் இறுதிக்குள் இந்தியாவிற்கு அனுப்ப இந்திய துதரகம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான விமானங்களை அதிகரிக்க ஒப்புக் கொண்ட தகவலை இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் 450,000 இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்காக மின்னணு முறையில் பதிவு செய்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

தினசரி விமானங்கள் 4 விமானங்களாக அதிகரிக்கப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை சுமார் 3,000 இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இந்த எண்ணிக்கை திரும்பும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இதுவே அதிகம்.

வேலைவாய்ப்பை இழந்த முதியவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், கடுமையான நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு திரும்புவதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

விமான டிக்கெட் விலை 750 திர்ஹம் முதல் 1,200 திர்ஹம் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கேரள முஸ்லீம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னார்வு குழுக்களின் உதவியாலு கடந்த சில வாரங்களாக விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேரள குழுமத்தின் துபாய் பிரிவின் செயல் தலைவர் முஸ்தபா வெங்கரா தெரிவிக்கையில் ஒரு விமானத்திற்கு சுமார் 10 ஏழை மக்களின் விமான கட்டணத்தை எங்கள் அமைப்பு செலுத்தி வருகிறது என்றார்.

தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்யில் உள்ள இந்தியர்களுக்காக ஒரு புதிய பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பிஎல்எஸ் விசா அலுவலகங்கள் வழியாக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர்.

தேவையான ஆவணங்கள் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாப்பை பராமரிக்க அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.