பொருளாதார தாக்கத்தால் நிரந்தரமாக மூடப்படும் துபாய் GEMS ஸ்கூல்!
துபாயில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஹெரிடேஜ் இந்தியன் பள்ளி (GHS) மார்ச் 2021 இல் மூடப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோன தொற்று நோய்யின் தாக்கத்தால் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (கே.எச்.டி.ஏ) பள்ளியை மூட ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த பள்ளி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பள்ளி ஐ.எம்.ஜி வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சருக்கு அருகில் அமைந்துள்ளது. சுமார் 1,500 மாணவர்கள் இதில் படித்து வருகின்றனர்.
இந்த கல்வியாண்டின் இறுதி வரை (மார்ச் 2021) பள்ளி இயல்பாகவே செயல்படும் என்று GEMS கல்வியின் உலகளாவிய தலைமை கல்வி அதிகாரி சர் கிறிஸ்டோபர் ஸ்டோன் அறிக்கையில் தெரிவித்தார்.
சிறந்த மதிப்பீடுகளுடன் சிபிஎஸ்இ மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தில் நல்ல தரம்மிக்க கல்வியை மாணவர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். மேலும் எங்கள் நெட்வொர்க்கில் உள்ள மாற்று பள்ளிகளுக்கு தடையற்ற இடமாற்றங்களை ஏற்பாடு செய்ய பள்ளி நிர்வாகம் பெற்றோருடன் கலந்து பேசி வருகிறோம் என்றார்.
மாணவர்களின் பெற்றோர்கள் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று பள்ளி கட்டணம் பற்றியது.
“எங்களிடம் பல கட்டண பள்ளிகள் உள்ளன. அவற்றில் GHS பள்ளிக்கு ஒத்த கட்டணங்களில் பல பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான ஜி.இ.எம்.எஸ் நியூ மில்லினியம் பள்ளிக்கு மாற்ற விரும்பும் எந்த குடும்பங்களும் மார்ச் 2021 கல்வியாண்டின் இறுதி வரை தற்போதைய ஜி.எச்.எஸ் கட்டணங்களையே செலுத்தலாம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், உண்மையில் ஜிஹெச்எஸ் பள்ளியை நாங்கள் கணிசமான இழப்பில் நடத்தி வருகிறோம். GEMS பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்பார்க்கும் மற்றும் தகுதியான முதலீட்டின் அளவை எங்களால் பராமரிக்க முடியாது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு வணிகம் மற்றும் COVID-19 ன் தாக்கத்தையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
ஜிஹெச்எஸ் வலைதளத்தில் அதன் கட்டணம் தெரிவிப்பதாவது, கேஜி 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை 14,290 முதல்
24,000 திற்ஹம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஜிஹெச்எஸ் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவரின் தந்தையான அஜேஷ் குனியேல் கூறுகையில், “பள்ளியும் அதன் தலைமையும் மிகச்சிறந்தவை, மாணவர்கள் பள்ளியை மிகவும் ரசிக்கிறார்கள். COVID-19 உடனான நிலைமை பல பகுதிகளைத் தாக்கியுள்ளது. மார்ச் 2021 வரை பள்ளி செயல்படும் என்பதால் அதுவரை அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்க பெற்றோருக்கு குறைந்த பட்சம் நிம்மதி உண்டு” என்றார்.
இந்த மாதத்தில் இது இரண்டாவது பள்ளி தனது மூடல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் துபாயின் நாட் அல் ஷெபாவில் உள்ள ரைசிங் பள்ளி சமீபத்தில் தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தால் ஜூலை மாதத்தில் மூடப்படும் என்று அறிவித்திருந்தது.