குவைத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது!

கொரோனா தொற்றால் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் கடந்த புதன் கிழமை முதல் சில பகுதிகளில் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குவைத் சிட்டி பகுதியில் உள்ள பெரிய பள்ளியில் இன்று ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் அந்த பள்ளிவாசலில் பணிபுரிந்து வரும் இமாம் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. குவைத்தில் தொலைக்காட்சிகளில் அதனை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.