பணத்தில் உள்ள கொரோனாவை போக்க மைக்ரோவேவை பயன்படுத்தியவரை துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது
துபாயில் வசித்துவரும் நபர் தனது பணத்தில் உள்ள கிருமிமை அழிக்க மைக்ரோவேவில் வைத்து சூடுபடுத்தினார். இறுதியில் அந்த நோட்டின் ஒரு பகுதி நெருப்பில் எரிந்ததாக துபாய் காவல்துறை செய்தி வெளியிட்டது.
மக்கள் தங்கள் பணத்தில் உள்ள கிருமியை போக்க கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் மற்றும் கிருமி நாசினி துடைப்பான்களை தவிர மற்ற புதுமையான வழிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் காவல்துறை எச்சரித்துள்ளனர்.
பயம் மற்றும் பீதி காரணமாக பொதுமக்களில் சிலர் தங்கள் உடமைகளில் உள்ள கிருமியை போக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பொருத்தமற்ற வழிகளில் செய்கிறார்கள் என்று துபாய் காவல்துறையின் குற்றவியல் சான்றுகள் மற்றும் குற்றவியல் துறையைச் சேர்ந்த லெப்டினன்ட் அகமது முகமது சலே அல் ஜனாஹி கூறினார்.
சேதமடைந்த நோட்டுகளை நேரடியாக வங்கியில் மாற்ற வேண்டுமே தவிர காவல் நிலையத்தில் அல்ல என்றும் அல் ஜனாஹி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி
சாதாரன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலவே வங்கி நோட்டுகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது கிருமி நாசினி மூலம் அதை சுத்தம் செய்தல் அல்லது ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகு உங்கள் கைகளை கழுவு வேண்டும்.
பணத்தின் கிருமியை போக்கும் வழிமுறை:
கிருமிகளின் பரவலைக் குறைக்க ஷாப்பிங் செய்யும் போது கையுறைகளை அணியுங்கள்.
பணத்தை செலுத்தும் போது உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
டெபிட் கார்ட் இயந்திரங்கள் இல்லை என்றால் வங்கி நோட்டுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
கிடைக்கும் மீதத்தொகையை பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.
வீட்டிற்கு வந்ததும், வங்கி நோட்டுகள் மற்றும் நாணயங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தவும்.
குறைந்தது 20 விநாடிகள் உங்கள் கைகளை சோப்பு பயண்படுத்தி
நன்கு கழுவுங்கள்.