ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டினர் குவைத் வர அனுமதி; ஆனால் இந்தியா மற்றும் இலங்கையர்களுக்கு தடை!
ஆகஸ்ட் 1 முதல் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் குவைதிற்கும் வெளிநாட்டிற்கும் பயணிக்க குவைத் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அரசாங்க தகவல் தொடர்பு மையம் வியாழக்கிழமை அதிகாலை ட்வீட் செய்ததுள்ளது.
ஆனால் இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.