அபுதாபியில் 2021 இல் 1,50,000 குற்றங்கள் பதிவாகியுள்ளன
மோசடி, அச்சுறுத்தல், சமூகப் பாதுகாப்பு, விபத்துக்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக சுமார் 1,50,000 அழைப்புகள் 2021 ஆம் ஆண்டு வந்துள்ளது என அபுதாபி காவல்துறையின் அமன் சேவை தெரிவித்துள்ளது.
அபுதாபியின் அமன் சேவையானது குற்றங்களை தடுப்பதற்கும், குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் உதவும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றங்கள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு அமன் சேவையில் புகாரளிக்க 8002626 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது 2828 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது ADPolice ஸ்மார்ட் பயன்பாட்டைப் பதிவிறக்கவும். ADpolice இணையதளம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் புகாரளிக்கலாம்.