அபுதாபியில் ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி
அபுதாபியில் திங்களன்று எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்பு வசதிகளுக்கு அருகிலுள்ள தொழில்துறை பகுதியான முசாஃபாவில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்ததாகவும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று மாநில செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் இருவர் இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை ஈரானுடன் இணைந்த ஹூதி குழு செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.