அபுதாபி கொமர்ஷல் வங்கி (ADCB) 400 ஊளியர்களை பணிநீக்கம் செய்கிறது
ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய வங்கியான அபுதாபி கொமர்ஷல் வங்கி (ADCB) சுமார் 400 ஊளியர்களை பணிநீக்கம் செய்கிறது. வங்கியின் செலவினங்களை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இன்னும் வங்கியின் உயர்மட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்படுவார்கள் என அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் ஏடிசிபி வங்கியின் 20 கிளைகள் மூட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
COVID-19 தொற்றுநோயின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என கடந்த மார்ச் மாதத்தில் ADCB அறிவித்திருந்தது. ஆனால் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளால் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் ADCB நிகர லாபத்தில் 84 சதவீதம் சரிவைக் கண்டது. NMC ஹெல்த் மற்றும் ஃபினாப்லர் குழுமத்திற்கு கொடுக்கப்பட்ட கடனால் 292 மில்லியன் டாலர் குறைபாடுகள் ஏற்பட்டதே இந்த சரிவுக்கு காரணம்.