அமீரகம்: சென்னை உட்பட கூடுதல் நான்கு இந்திய நகரங்களிலிருந்து விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ்
துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு கூடுதல் நகரங்களில் இருந்து துபாய்க்கு ஜூலை 26 வரை விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூலை 12 முதல் ஜூலை 26 வரை பெங்களூரு, கொச்சி, டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் செல்லும் சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க உள்ளதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி விமான நிறுவனம் அறிவித்திருந்தது.
கூடுதலாக அறிவித்த நான்கு நகரங்கள் உட்பட மொத்தம் ஒன்பது இந்திய நகரங்களில் இருந்து ஜூலை 26 வரை துபாய்க்கு திருப்பி அனுப்பும் விமானங்களை இந்த விமான நிறுவனம் இயக்கவுள்ளது.
கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு இடையேயான திருப்பி அனுப்பும் விமானங்கள் இரு திசைகளிலும் தகுதியான பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை செய்திக்குறிப்பில் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியது.
ஆனால் பெங்களூரு, அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து துபாய் செல்லும் விமானங்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.