ஜூலை 12 முதல் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் – ஓமான் காவல்துறை அறிவிப்பு
குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களது காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் ROP வலைத்தளம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் புதுப்பிக்கலாம் என்று ராயல் ஓமான் காவல்துறை (ROP) அறிவித்துள்ளது.
மேலும் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை அருகிலுள்ள ROP சேவை மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். புதிய சேவை ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.