சவூதி: கொரோன கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு மூடப்படும்
கொரோன தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத தனியார் துறை நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதில், உடல் வெப்பநிலையை சரிபார்க்கத் தவறியது மற்றும் தடுப்பூசி போடப்படாத அல்லது கொரோன பாதிக்கப்பட்ட நபர்களை நிறுவனங்களுக்குள் அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.
மேலும் நிறுவனங்களில் கிருமிநாசினி இல்லாமை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளை கடைபிடிக்காதது மற்றும் உபகரணங்கள், வணிக வண்டிகளை தூய்மையாக்கத் தவறியதும் அடங்கும்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய தவரிய சிறு நிறுவனங்களுக்கு SR 10,000 முதல் பெரிய நிறுவனங்களுக்கு SR 1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
தவறுகள் மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு அபராதம் SR 2,00,000 வரை இரட்டிப்பாக்கப்படலாம் என்றும், நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மூடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.