பால் உற்பத்திக்காக 4,500 ஹால்ஸ்டீன் மாடுகள் அபுதாபி வந்தடைந்தது
பால் உற்பத்திக்கான மாடுகளில் சிறந்த இனங்களில் ஒன்றான ஹால்ஸ்டீன் மாடுகள் சுமார் 4,500 உருகுவே குடியரசிலிருந்து அபுதாபியில் உள்ள கலீஃபா துறைமுகத்திற்கு வந்துள்ளது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரக தலைமையின் உத்தரவின் பேரில் ZAIN 1 என்ற கப்பல் அனுப்பப்பட்டது.
குறிப்பிடப்பட்ட நேரத்தில் மாடுகளை ஏற்றிக் கொண்டுவந்த கப்பல் கலீபா துறைமுகத்திற்கு வந்ததும் உள்ளூர் அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அதை பெறுவதற்காக அங்கு கூடினர்.
அதில் அல் அய்ன் பண்ணை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், உணவு பாதுகாப்பு அலுவலகம், அபுதாபி காவல்துறை, கிளாடினர் கோ, மீரா இன்டர்நேஷனல் ஷிப்பிங் கோ மற்றும் எமிரேட்ஸ் எதிர்கால நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இருந்தது.
இந்த ஏற்றுமதி திட்டமிடப்பட்ட ஏற்றுமதிகளில் முதன்மையானது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய கால்நடை வளர்ப்புத் திட்டத்திற்கான ஒரு லட்சிய துவக்கத்தின் ஆரம்பமாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியம் ஹரேப் அல்ஹெய்ரி தெரிவித்ததாவது, ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வலுவான மற்றும் நெகிழ்வான உணவு முறையைக் கொண்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் முலம் தற்போதைய மற்றும் எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் சமாளிக்க முடியும்.
உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க புத்திசாலித்தனமான தலைமை மிக முக்கியம்.
ஹால்ஸ்டீன் இன மாடுகளின் வருகை உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அனைத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்தைகளில் வைப்பதற்கும் மற்றும் நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான சரியான முயற்ச்சியாகும்” என்றார்.