ஓமான்: வட்டியில்லா அவசர கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஓடிபி பெறத் தொடங்கியது

சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் உத்தரவின் கீழ் ஓமான் மேம்பாட்டு வங்கி (ஓடிபி) வட்டி இல்லாத அவசர கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓமான் அரசு வட்டியில்லா அவசர கடன் திட்டத்தை அறிவித்ததாக ஓமான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இத்திட்டத்திற்காக 300 மில்லியன் ஓமான் ரியால்களை அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இன்று ஜூலை 5 ஓமான் மேம்பாட்டு வங்கி வட்டி இல்லா கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியது.

இந்த திட்டம் COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோரின் சில பிரிவுகளுக்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 கட்டுப்பாட்டுக் குழு அமைத்த விதிமுறைகளின்படி ரியாடா அட்டை வைத்திருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சுயதொழில் உரிமையாளர்கள் ஓமான் மேம்பாட்டு வங்கி (ஓடிபி) மற்றும் அல் ராஃப்ட் நிதியிலிருந்து கடன்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.