கத்தார்: இந்திய பயணிகளுக்கு இன்டிகோ விமான நிறுவனத்தின் வேண்டுகோள்

வந்தே பாரத் திட்டத்தில் இந்தியா செல்பவர்கள் இன்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்வதற்கு முன் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என இன்டிகோ விமான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் 4 கட்டத்தில் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு பயணிகளை கொண்டுசெல்ல 238 இன்டிகோ விமானங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஜூலை 8 ஆம் தேதி முதல் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, கன்னூர், கோழிக்கோடு, ஐதராபாத், பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு இன்டிகோ விமானங்களை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இது போன்ற விமானங்களில் பயணிக்கும் பயணிகள் நேரடியாக இன்டிகோ இணையதளத்தில் முன்பதிவு செய்யாமல் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு பின் இன்டிகோ இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் 4 கட்டத்தில் கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு செல்லக்கூடிய 51 விமானங்களின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு 3 விமானங்கள் ஆகும்.

ஜூலை 15, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு தோஹாவிலிருந்து சென்னைக்கு விமானங்கள் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.