அமீரகம்: மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட உள்ளன
ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படுவது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் செய்ஃப் அல் தஹேரி கூறுகையில், ஜூலை 1 புதன்கிழமை முதல் மசூதிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் வெளி சாலைகள், தொழில்துறை பகுதிகள், தொழிலாளர் நகரங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள மசூதிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.
30 சதவீத வழிபாட்டாளர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அடுத்த அறிவிப்பு வரும்வரை வெள்ளிக்கிழமைகளில் நடைபெரும் ஜூம்ஆ தொழுகை நடைபெறாது.
மசூதி இமாம்கள் மற்றும் மசூதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 சோதனைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டனர் என அல் தஹேரி கூறினார்.
உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகளுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அல்லது நெருக்கமாக வாழ்ந்த நபர்கள் பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளவோ அல்லது மசூதிகளுக்குள் நுழையவோ கூடாது. இது போன்ற பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மூத்த குடிமக்கள், 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மசூதிகளுக்கு செல்லக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
கடுமையான வழிகாட்டுதல்களுடன் மசூதிகள் திறக்கப்பட உள்ளதால் வழிபாட்டாலர்கள் அனைவரும் Al Hosn அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
குறைந்தபட்சம் 3 மீட்டர் சமூக இடைவெளி விட்டு நிற்கவேண்டும். முககவசம் அணிவது கட்டாயமாகும்.
கூட்டங்களைத் தவிர்க்க வீட்டிலேயே ஒழு செய்துவிட்டு வாருங்கள்.
வழிபடுபவர்கள் தங்கள் சொந்த பிரார்த்தனை பாய்களைக் கொண்டு வர வேண்டும், வெளியேறும்போது அவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
குர்ஆன் வாசிப்பவர்கள் தனது சொந்த மின்னணு சாதனங்களில் மூலம் வாசிக்க வேண்டும் அல்லது குர்ஆனை வீட்டிலிருந்து கொண்டு வரப்பட வேண்டும். வழிபடுபவர்கள் மசூதிகளில் கிடைக்கும் குர்ஆனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மசூதிகளில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் வருமேயானால் அந்த மசூதிகள் மூடப்படும் என்று அல் தஹேரி தெரிவித்தார்.