கிரிப்டோகரன்சி வாங்கி குவிப்பதில் சவூதியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்
அரபு நாடுகளில் கிரிப்டோகரன்சிகளை அதிக அளவில் வைத்திருக்கும் நாடுகளில் சவூதி அரேபியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
கிரிப்டோகரன்சிகளைக் கையாளும் டிரிபிள்ஏ (TripleA) என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மொத்தம் 4,53,000 சவூதியர்கள் இந்த வகையான டிஜிட்டல் கரன்சியை வைத்திருக்கிறார்கள் என்று அல்-மதீனா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கிரிப்டோகரன்சி உரிமையாளர்களைக் கொண்ட அரபு நாடுகளில் எகிப்து முதலிடத்தில் உள்ளது. சுமார் 1.8 மில்லியன் எகிப்தியர்கள் கிரிப்டோவை வைத்துள்ளனர். மொராக்கோ 8,78,000 உரிமையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.