அமீரகத்தில் உள்ள இந்திய பாஸ்போர்ட் சேவை புதிய ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூன் 15 திங்கள் அன்று தனது வலைத்தளத்தின் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசாவிற்கான ஆன்லைன் முன்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவை மையங்களை பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் நடத்தி வருகிறது. இவை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்திய உள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பித்தலை எதிர்பார்க்கும் பல விண்ணப்பதாரர்கள், கோவிட் -19 நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு திருப்ப விரும்புவோர் மற்றும் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட விசாக்களை முத்திரையிட காத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக பெரிய மக்கள் கூட்டம் பி.எல்.எஸ் மையங்களில் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த கூட்டத்தை குறைக்க பி.எல்.எஸ் வலைத்தளமான www.blsindiavisa-uae.com இல் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை துபாய் தேராவில் உள்ள பி.எல்.எஸ் மையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுருந்தனர், அதில் “ஜூன் 13 முதல் அமலுக்கு வரும் பி.எல்.எஸ் வலைத்தின் முன்பதிவு முறையில் முன்பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.”
இந்த சேவை ஏற்கனவே இரண்டு பிரீமியம் பிஎம்எஸ் மையங்களில் ஆன்லைன் முன்பதிவு வசதியைக் கொண்டிருந்தது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 10 சாதாரண பிஎல்எஸ் மையங்களிலும் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தி உள்ளது.
தூதரக அதிகாரி தெரிவிக்கையில், அவசர காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியவர்கள் மட்டுமே புதுப்பிக்க வர வேண்டும் என்றார்.
அபராதம் விதிக்கப்படலாம் என்று நினைத்து இந்திய வெளிநாட்டினர் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அவசரப்பட தேவையில்லை என்றும் தூதர் மீண்டும் வலியுறுத்தினார்.
“பாஸ்போர்ட்டை புதுப்பிக்காததற்கு அபராதம் இல்லை. பாஸ்போர்ட்டை மூன்று ஆண்டுகள் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் புதுப்பிக்க முடியும். மூன்று ஆண்டு காலம் முடிந்ததும் இந்தியாவில் இருந்து போலீஸ் சரிபார்ப்பு தேவைப்படும், ”என்று அவர் விளக்கினார்.