ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஓமான் பேச்சுவார்த்தை

ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சரான டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியுடன் ஓமானின் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் ஹமத் அல் புசைதி திங்களன்று அரசியல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு, உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இரு தரப்பும் பொதுவான நலன் சார்ந்த சில பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்தன.

பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அணுசக்தி ஒப்பந்தமான “கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA)” தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஷேக் கலீபா அலி அல் ஹார்த்தி, அமைச்சகத்தின் அலுவலகத் துறைத் தலைவர் காலித் ஹஷெல் அல் முசல்ஹி, ஓமானுக்கான ஈரான் தூதர் அலி நஜாபி கோஷ்ரூதி மற்றும் அவர்களுடன் வந்த தூதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.