சவூதி அரேபியாவின் நிறுவன தினமான பிப்ரவரி 22 ஆம் தேதி விடுமுறை

சவூதி அரேபியாவின் நிறுவன தினமான பிப்ரவரி 22 ஆம் தேதி பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைவருக்கும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும் என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அஹ்மத் சுலிமான் அல்-ராஜி சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

மேலும் சவூதி அரேபியாவின் வரலாற்றின் ஆழத்தை உணரவும், சவூதி மக்களின் இதயங்களில் அதன் நினைவை நிலைநிறுத்தவும் இந்த முயற்ச்சி உதவும் என்று அல்-ராஜி தெளிவுபடுத்தினார்.