ஓமான்: முத்ராவில் உள்ள உணவகங்களில் சோதனை, 6 உணவகங்களுக்கு அபராதம்
ஓமான் உணவுக் கட்டுப்பாட்டுக் குழுவானது இன்று ஜனவரி 27 இல் மஸ்கத்தில் உள்ள முத்ராவில் 59 உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது என்று மஸ்கத் நகராட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில், ஆறு உணவகங்கள் மீது விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது, 124 கிலோ பழமைய உணவுப் பொருட்களையும் அழித்து மற்றும் உணவு தயாரிப்பதற்கு ஏற்றதாக இல்லாத 13 உபகரணங்களை பறிமுதல் செய்தது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.