ஓமானில் தங்க நகைகள் வாங்க அடையாள அட்டையை கட்டாயம் காட்டவேண்டும்

தங்கம், விலைமதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் கற்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாள அட்டையை காட்டவேண்டும் என அனைத்து நகைக்கடைக்காரர்கள் மற்றும் அதன் தொடர்புடைய வணிகங்களை வணிகம், தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியதாவது: “பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கான அமைச்சகத்தின் மேற்பார்வைப் பங்கின் ஒரு பகுதியாக இது உள்ளது. மேலும் அனைத்து விதமான வணிகப் பரிவர்த்தனைக்கு தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை இது உறுதிசெய்கிறது.”