சவூதி அரேபியாவின் தேசியக் கொடியை அவமதித்ததற்காக 4 வெளிநாட்டவர்கள் கைது

சவூதி அரேபியாவின் தேசியக் கொடியை அவமதித்ததற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 வெளிநாட்டவர்களை ஜித்தா காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மக்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சாலையில் உள்ள குப்பை தொட்டியில் பல பழைய பொருட்களை சவூதி அரேபியாவின் தேசியக் கொடியில் கட்டப்பட்டு இருந்ததை கண்ட ஒரு நபர் அதை அவிழ்த்து, கழிவுகளை தரையில் எறிந்தார். பின்னர் சவூதி தேசியக் கொடியை மடித்து கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அது தொடர்பாக விசாரனை நடத்திய ஜித்தா காவல்துறை சவூதி தேசியக் கொடியை அவமதித்ததற்காக 4 வங்கதேசத்தை சேர்ந்த வெளிநாட்டவர்களை கைது செய்தனர். அவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் 3,000 சவூதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.