துபாய்: பொது இடங்களில் பறவைகளுக்கு உணவளித்தால் 200 திர்ஹம் அபராதம்
துபாயில் பறவைகளுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நக்கீல் சமூக மேலாண்மை நிறுவனம் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
காக்கைகள், புறாக்கள், கிளிகள் மற்றும் பிற பறவைகளுக்கு உணவு வழங்குவது ஒட்டுண்ணிகளின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் அதையொட்டி நோய் பரவுகிறது. எனவே பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் துபாய் மாநகராட்சியின்படி உணவளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்காத எவருக்கும் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று நக்கீல் சமூக நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை ஜனவரி 19 அன்று குடியிருப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது.