அபுதாபி: பயங்கரவாத தாக்குதல்களில் காயமடைந்த சக ஊழியர்களை ADNOC குழுவின் தலைமை நிர்வாகி சந்தித்தார்

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவன (ADNOC) குழுவின் தலைமை நிர்வாகி டாக்டர் சுல்தான் அல் ஜபேர் அவர்கள் கடந்த திங்களன்று நடைபெற்ற தாக்குதல்களில் காயமடைந்த சக ஊழியர்களைப் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஐக்கிய அரபு அமீரக தலைமையின் மற்றும் அட்னாக் குடும்பத்தின் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்த அவர் ஐக்கிய அரபு அமீரகம் தனது முழு ஆதரவை உங்களுக்கு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

டாக்டர் அல் ஜாபர் இறந்த சக ஊழியர்களின் குடும்பத்தினரிடமும் சந்தித்து பேசினார்.