ஓமான்: மனித கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

மனித கடத்தலில் ஈடுபட்ட மூவரை ராயல் ஓமன் காவல்துறை கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்களுக்கு எதிராக மனித கடத்தலில் ஈடுபட்ட அரபு நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவியல் விசாரணை மற்றும் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது என ராயல் ஓமன் காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.