கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு 3,250 பாதுகாப்புப் படைகளை துருக்கி அனுப்ப உள்ளது

இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கும் உலகக் கோப்பை கால்பந்துக்காக துருக்கி அரசு 3,250 பாதுகாப்பு அதிகாரிகளை கத்தாருக்கு அனுப்பும் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று துருக்கி நாட்டின் தெற்கு ரிசார்ட் நகரமான அன்டலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சோய்லு பேசியதாவது, கத்தாரில் நடக்கவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையின் போது 3,000 கலக தடுப்பு போலீஸ் அதிகாரிகள், 100 துருக்கிய சிறப்புப் படைகள், 50 வெடிகுண்டு கண்டறியும் நாய்கள் மற்றும் அவற்றின் ஆபரேட்டர்கள், 50 வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அடங்கிய குழுவை அனுப்ப இருப்பதாக தெரிவித்தார்.