ஓமானுக்கு வரும் பயணிகள் பதிவு செய்யும் இணையதளம் மாற்றப்பட்டுள்ளது

ஓமானுக்கு வரும் பயணிகள் பதிவு செய்யும் இணையதளம் மாற்றப்பட்டு உள்ளதாகவும், ஜனவரி 18, 2022 செவ்வாய்கிழமை முதல் புதிய இணையதளத்தில் பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

பழைய இணையதளமான https://covid19.emushrif.om என்ற முகவரிக்கு பதிலாக புதிய முகவரியான https://travel.moh.gov.om க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இது ஜனவரி 18, 2022 செவ்வாய்க் கிழமை மதியம் 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.