சவூதி: பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்யும் போது VAT வரி செலுத்த வேண்டாம்

பயன்படுத்திய வாகனங்களை ஷோரூம் அல்லது VAT முறையில் பதிவு செய்தவர்களால் விற்பனை செய்யும் போது மட்டுமே அவற்றிற்கு மதிப்பு கூட்டு வரி (VAT) விதிக்கப்படும் என ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் திங்கள்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.

VAT அமைப்பில் பதிவு செய்யப்படாத மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடாத தனிநபரால் வாகனத்தை விற்பனை செய்வது VATக்கு உட்பட்டது அல்ல என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வருடாந்த வருமானம் SR 3,75,000 என்ற கட்டாய வரம்பை எட்டியுள்ளவர்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் VAT அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.