சவூதி அரேபியாவின் கனிம துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனமான வேதாந்தா திட்டம்

இந்திய தொழிலதிபரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனமான வேதாந்தா குழுமம் சவூதி அரேபியாவின் கனிமத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் கடந்த ஜனவரி 12 புதன்கிழமை ரியாத்தில் நடைபெற்ற ‘ Future Minerals Forum 2022’ என்ற நிகழ்ச்சியில் விருந்தினர் பேச்சாளராக கலந்துகொண்டு துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட தாதுக்களில் சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் குறித்து பேசினார்.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே சவூதி அரேபியாவில் உள்ள பங்குதாரர்களுடன் கலந்துரையாடி வருகிறது. இது மத்திய கிழக்கில் கனிம மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வேதாந்தா அறிக்கையில் தெரிவித்துள்ளது.