ஒரே ஓடுபாதையில் 2 இந்திய விமானங்கள், நூலிழையில் விபரீதத்தை தவிர்த்த துபாய் விமான நிலையம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 9ம் தேதி எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் 5 நிமிட இடைவெளியில் துபாய் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட தயாராக இருந்தன. அதில் ஒன்று துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கும் (EK-524) மற்றொன்று பெங்களூருவுக்கும் (EK-568) செல்ல இருந்த விமானஙகள் ஆகும். இந்த இரண்டு விமானங்களுக்கும் 30R என்ற ஓடுபாதை ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் ஹைதராபாதுக்கு செல்லவிருந்த விமானம் புறப்பட அனுமதி கிடைத்தவுடன் மிக வேகமாக ஓடுபாதைக்கு சென்றது. அப்போது அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் அதிக வேகத்தில் சென்று கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக ஹைதராபாத் விமானத்தை டேக் ஆஃப் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து ஹைதராபாத் விமானத்தின் வேகத்தை உடனடியாக குறைத்த விமானி அந்த விமானத்தை ஓடுபாதையில் இருந்து விலக்கி டாக்சிவே N4 எனப்படும் விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
இந்த உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிரக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க துபாய் விமான நிலைய போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.