ஓமான்: அல் தாகிலியாவில் உள்ள பொது பூங்கா பார்வையாளர்களுக்காக இன்று திறக்கப்படுகிறது

அல் தாகிலியாவில் உள்ள மனா பொதுப் பூங்கா இன்று ஜனவரி 13, 2022 அன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்று அல் தாகிலியா நகராட்சி தெரிவித்துள்ளது.

அல் தாகிலியா நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனா பொதுப் பூங்காவை இன்று வியாழன் 13, 2022 மாலை முதல் பொதுமக்களுக்காகத் திறப்பதாக அறிவிக்கிறது. இந்த திறப்பு விழாவுடன் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்”.