சவூதி: ஒருமுறை பயன்படுத்திய ஷேவிங் கருவிகளை மீண்டும் பயன்படுத்தினால் SR2000 அபராதம்

ஒருமுறை பயன்படுத்திய ஷேவிங் கருவிகளை மீண்டும் பயன்படுத்தினால் கடை உரிமையாளருக்கு SR2000 அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபிய மாநகர மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் (MOMRA) தெரிவித்துள்ளது.

இந்த சட்டமானது வரும் ஜனவரி 15 ஆம் தேதி 2022 சனிக்கிழமையன்று முதல் செயல்படுத்தத் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சட்டத்தை மீறும் பட்சத்தில் ஒரு வாரத்திற்கு கடையை மூடுவதுடன், அபராதம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.