2022 இல் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் தரவரிசையில் இந்தியா 90ல் இருந்து 83 ஆக உயர்வு

2022 இல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் 90ல் இருந்து 7 இடங்கள் முன்னேறி இப்போது 83 ஆவது இடத்தில் உள்ளது.

இத்தகவலை உலகின் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் தரவரிசை பட்டியலை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) வெளியிட்டுள்ளது.

ஓமான் மற்றும் அர்மேனியா நாடுகளை சேர்த்து மொத்தம் 60 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.