அஜ்மான்: பாதுகாப்பு விதிகளை மீறும் அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் வரை ஊதியக் குறைப்பு

கொரோன தொற்று பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக அரசுத் துறை ஊழியர்களுக்கு அஜ்மான் அரசு சம்பளப் பிடித்தம் மற்றும் பிற அபராதங்களை விதிக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், எட்டு பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அவற்றுக்கான அபராதங்களைக் குறிப்பிட்டுள்ளது.

அதில் சில அறிக்கைகள்

முகக்கவசம் அணியாதவர்கள்

சக ஊழியர்களிடம் கை குலுக்குபவர்கள்

குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் கூடுபவர்கள்

இது போன்ற மீறல்களைச் செய்தால், முதலில் அவருக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் மீறினால், ஒரு நாள் சம்பளம் குறைக்கப்படும். மீண்டும் மீண்டும் செய்தால், ஊழியருக்கு 10 நாட்கள் வரை சம்பளம் குறைக்கப்படும்.