ஓமனில் போதைப்பொருள் கடத்த முயன்ற 4 வெளிநாட்டினர் கைது
மஸ்கத்: 1,522 காட் போதைப்பொருள் பொதிகளை கடத்த முயன்ற நான்கு பேரை ராயல் ஓமன் காவல்துறை கைது செய்துள்ளது.
தோஃபர் மாகாணத்தில் உள்ள கடலோர காவல்படை போலீசார் ஒரு படகில் 1,522 காட் பொதிகளை கடத்த முயன்ற போது நான்கு வெளிநாட்டு கடத்தல்காரர்களை கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வருகின்றன என்று ஓமன் காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.