துபாய்: அல் மக்தூம் பாலத்தில் இனி ஞாயிற்றுக் கிழமைகளில் சாலிக் வரி இல்லை
ஜனவரி 15 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் உள்ள மிதக்கும் பாலமான அல் மக்தூம் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சாலிக் வரி பொருந்தாது என துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
ஜனவரி 15 முதல் மிதக்கும் பாலம் மூடப்படும் நேரங்கள்:
வார நாட்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை (வழக்கமான நேரம்)
வார இறுதி நாட்கள்: சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை.