சவூதி: ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களை விநியோகிக்க ரோபோக்கள் அறிமுகம்

மனித தலையீடு இல்லாமல் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களை விநியோகிக்க ரோபோக்களை சவூதி அரேபிய அரசு மஸ்ஜிதல் ஹராம் மசூதியில் அறிமுகப்படுத்தி உள்ளது என ஜம்ஜம் நீர்ப்பாசனத் துறையின் துணைத் தலைவர் பத்ர் அல்-லுக்மானி தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோக்கள் ஒரு சுற்றுக்கு 30 பாட்டில்களை விநியோகிக்கும் திறன் கொண்டது. ஒரு சுற்றுக்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களை ஏற்றுவதற்கு 20 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மேலும் இது மக்களுடன் மோதவோ அல்லது மக்களுக்கு தடையாகவோ இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.