கத்தார்: FIFA உலகக் கோப்பையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை

திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பையின் போது கத்தாரில் உள்ள பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 முதல் டிசம்பர் 25 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வழங்கப்பட்ட 12 நாள் இடைவெளியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

2022 இன் உலகக் கோப்பையானது நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.