200 மில்லிக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பஹ்ரைனில் தடை
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில் 200 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த பஹ்ரைன் அரசு தடை செய்துள்ளது.
சோதனை மற்றும் அளவியல் இயக்குநரகத்தின் கூற்றுப்படி 200 மில்லிலிட்டருக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.