ஓமானில் இருந்து ஜூன் 7 அன்று பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கு இரு சிறப்பு விமானங்கள் இயக்கம் – சலாம் ஏர் அறிவிப்பு

சலாம் ஏர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை மஸ்கத்-தோஹா-மஸ்கத் மற்றும் மஸ்கத்-பஹ்ரைன்-மஸ்கத் ஆகிய இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்க உள்ளதாக சலாம் ஏர் அறிவித்துள்ளது.

விமானங்களில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்காக அழைப்பு எண்களையும் வெளியிட்டுள்ளது.

ஓமான்: +968 24272222, பஹ்ரைன்: +97317211388 அல்லது +97339331510 மற்றும் கத்தார்: +974 44420944 அல்லது +974 30151621 (வாட்ஸ்அப்).